மூன்றாவது நாள் கார்யக்ரமம்
-- Continued in next post - 6
காலையில் ப்ரவர்க்யம், உபஸத்து, ஸுப்ரஹ்மண்யாஹ்வானம் முடிந்த பிறகு 2-வது அடுக்கு உபதானம் செய்ய வேண்டும். முதல் அடுக்கிற்கும் இந்த அடுக்கிற்கும் கற்களை வைப்பதில் வேறுபாடு உண்டு. இந்த 2-வது அடுக்கில் அச்விநீ தேவதைகளுக்கு கற்கள் அடுக்கப் படுகின்றன. இதனால் வியாதி தொல்லை ஏற்படாது. பிறகு வேறு சில கற்களை அடுக்குவதன் மூலம் காற்று வசதியாகவும் தொல்லையில்லாமல் வீசவும் வழி ஏற்படுகிறது. அதன்மூலம் நல்ல மழை எப்பொழுதும் பொழிய வழி செய்யப்படுகிறது. எனவே காற்று, மழை, இவற்றால் தேச க்ஷேமம் ஏற்பட காரணமாகிறது. வேறு சில கற்களை அடுக்குவதன் மூலம் மனிதனுக்கு பிராணிகள் தொல்லை இல்லாமல் மற்ற பிராணிகளை மனிதன் அடக்கி ஆளும்படியான சக்தியும் கிடைக்கிறது. முறையே 200 கற்களையும் அடுக்கி அன்றைய நிகழ்ச்சி குதிரை வலம் வருவதுடன் நிறைவு பெறுகிறது. (மாலை ப்ரவர்க்யம் முதலியவன உண்டு).
-- Continued in next post - 6
No comments:
Post a Comment