Śrī. A. S. Subbukrishna Mahāgnicit (Somayājī)
"யாகம்" (यागः) என்ற பதத்திற்கு "தேவதைக்கு செய்யப்படும் பூஜை" என்று அர்த்தம். விக்ரஹத்திற்கு ஆராதனை செய்வதைப் போலவே அக்னிபகவானை ஆராதனை செய்து அதில் "ஆஹுதி" (आहुतिः) களை அளிக்கிறோம். இரண்டுமே ஆராதனை தான்.
யாகங்கள் பலவகைப்படும். இவையே "யஜ்ஞங்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன. விவாஹம் செய்து கொண்டு அந்த அக்னியில் செய்பவை "பாக-(पाक)-யஜ்ஞங்கள்" -- சிறிய யாகங்கள் -- ஆகும். "ஆதானம்” (आधानम्) என்ற சிறிய கர்மாவை செய்து மூன்று அக்னிகளை ஏற்படுத்திக்கொண்டு தினமும் இருவேளையும் செய்வது "அக்னி-ஹோத்ரம்" (अग्निहोत्रम्) ஆகும். மாதத்திற்கு இருமுறை செய்வது -- அமாவாசை பௌர்ணமி கழித்த மறுநாளில் செய்வது -– “இஷ்டி” (दर्श-पौर्णमास-इष्टिः) ஆகும். பஞ்சாங்கங்களில் இது குறிப்பிட்டு வரப்படுவதைக் காணலாம். பதினாறு ரித்விக்-ऋत्विक्-களைக்கொண்டு வசந்த காலத்தில் மூன்று வேதங்களைக் கொண்டு ஐந்து நாள் செய்யப்படுவது "ஸோமயாகம்" (सोमयागः) என்பதாகும். இதில் “ஸோமம்” (सोमः) என்று சொல்லப்படுகிற கொடியைக் கொண்டுவந்து மந்த்ரங்களால் இடித்து மரப் பாதிரங்களில் க்ரஹணம் செய்து ஸாமவேதம், ரிக்வேதம் முதலியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட "ஸ்துதம்", (स्तुतम्) "சஸ்த்ரம்" (शस्त्रम्) எனப்படுகின்ற மந்திரங்களை அழகாகச் சொல்லி ஹோமம் செய்து "அவப்ருத" (अवभृत:) ஸ்னானம் செய்து முடிப்பது ஸோமயாகம் ஆகும்.
முதலில் ஸோமயாகம் செய்தவர்தான் இந்த “கருடசயனம்” (गरुडचयनम्) என்பதை செய்யலாம். முதல் ஸோமயாகத்தில் இதை செய்வதற்கில்லை என்று பெரும்பாலான மகரிஷிகளின் அபிப்ராயம். ஸோமயாகத்திர்கு மேற்பட்டதான யாகங்களில் இந்த கருட-சயனத்தை சேர்த்து செய்யலாம். அதிலும் "வாஜபேயம்" (वाजपेय:) போன்ற சிலவற்றில் செய்யக்கூடாது என்றும் "அச்வமேதம்" (अश्वमेध:) “மஹாவ்ரதம்” (महाव्रत:) போன்றவற்றில் தவறாமல் செய்ய வேண்டும் என்பதும் ஸூத்ரகாரரின் கட்டளை. நாம் நமது தேசத்தில் செய்யும் யாகங்கள் யாவும் “ஆபஸ்தம்பர்” என்ற மஹாமுனிவரால் சொல்லி இருப்பதை பின்பற்றி செய்கிறோம். கிருஷ்ண யஜுர் வேதம் 44 ப்ரச்னங்களைக் கொண்டது. அதில் 14 ப்ரச்னங்கள் இந்த மஹாக்னிசயனத்தைப் பற்றி சொல்கிறது என்றால் இதன் பெருமை சொல்லாமலேயே விளங்கும்.
இதற்கு "கருடசயனம்" என்பது பெயர் வர காரணமிருக்கிறது. கருடன் வடிவில் பல வடிவில் செங்கற்களை அடுக்கி அதன் மீது அக்னியை முறைப்படி ப்ரதிஷ்டை செய்து யாகம் செய்வதால் இப்பெயர் வந்தது. இதற்கு "ச்யேனசிதி:" (श्येनचिति:) என்பதுதான் உண்மையான பெயர். இதை “மஹாக்னிசயனம்” (महाग्निचयनम्) என்றும் சொல்வார்கள். வேறு சில சயனங்கள் இருப்பதாலும் அவை சிறிய அளவில் இருப்பதாலும் (காடக-काठक-சயனங்கள்) அவற்றிலிருந்து இதைப் பிரித்துக் காட்டுவதற்காக இதை "மஹாக்னிசயனம்" என்று கூறுகிறோம்.
இதை செய்வதற்கான முறைகள், அளவுகள், கற்களின் எண்ணிக்கை எல்லாவற்றையும் மகரிஷிகள் அழகாக சொல்லியுள்ளனர். ஒரு மனிதன் தன் கைகளை உயர்த்தி நின்றால் எவ்வளவு உயரம் வருமோ அதை அளவாகக் கொண்டு ஒரு சதுரம் வரைந்தால் என்ன பரப்பளவு உள்ளதோ அதை ஒரு "புருஷப்ரமாணம்" (पुरुषप्रमाणम्) என்று கூறுவோம். அந்த புருஷப்ரமாணத்தின் பரப்பு அளவுக்கு கருடாகாரம் தயார் செய்து அதில் 5 அடுக்குகள் கற்கள் அடுக்கப்படுகிறது. 5 அடுக்குகளின் உயரம் முழங்கால் உயரம் இருக்கும். இப்படி அடுக்கும் ஒவ்வொரு வரிசையிலும் ("சிதி"-चिति:-எனப்படுவது) 200 கற்கள் இருக்கும். எனவே 1000 கற்களின் மேல் ஹோமம் செய்யப்படுகிறது. இதுவே 2-வது 3-வது முறை செய்வதானால் கற்களின் எண்ணிக்கை, பரப்பளவு, உயரம் முதலியவை அதிகரிக்கும். அதை விளக்கும் அட்டவணை:

3-முறைக்குமேல் எத்தனை முறை செய்தாலும் (1), (2), (4) கட்டங்களில் சொல்லிய அளவு எண்ணிக்கைகள் மாறாது, ஆனால் (3) கட்டத்தில் சொன்ன பரப்பளவு 4, 5, 6 என்று அதிகரித்துக் கொண்டே போகும். அதாவது பரப்பளவு மட்டும் அதிகரிக்கும் என்பது கருத்து. இந்த கருடசயனத்தின் விசேஷ பலன்களை முடிவுரையில் காணலாம். இனி யாக விபரங்களைப் பற்றி கவனிப்போம்.
-- Continued in the next post - 2
No comments:
Post a Comment