நான்காவது நாள்
காலை காரியக்ரமங்கள் முடிவுற்ற பிறகு 3-வது அடுக்கு அடுக்குதல் நடைபெறும். இதில் த்வாரத்துடன் உண்டான சுக்கான் கல்லை வைக்க வேண்டும். பிறகு ஒரு தங்கத் துண்டு வைக்க வேண்டும், முதல் அடுக்கில் அடுக்கியதுபோல். பிறகு கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்ற க்ரமத்தில் பல கற்களை வைக்க வேண்டும். இதனால் ம்ருத்யு பயம் நீங்குகிறது. யாகத்தை செய்பவரின் ஆயுள் விருத்தியாகிறது. அவரைப் ப்ற்றியோ அவருக்கோ தீங்குகள் செய்தால் தீங்கு செய்பவரைத்தான் அது தாக்கும். யாகம் செய்பவர் அவ்வளவு உயர்ந்தவராக ஆகிறார். எனவே சயனம் செய்தவரை உயர்ந்த நிலையில் வைக்க வேண்டும். க்ராமமாக 200 கற்களையும் உபதானம் செய்து அன்றைய நிகழ்ச்சி மற்ற அங்கங்களுடன் நிறைவு பெறுகிறது.
ஐந்தாவது நாள்
ஐந்தாவது நாள்
காலை கார்யக்ரமங்களுடன் ஆரம்பமாகிறது. அன்று 4-வது அடுக்கு உபதானம் செயப்படுகிறது. இங்கு வேதத்தில் பிறந்த மந்திரங்களின் வரிசைக்ரமம் மாறி வேறு க்ரமத்தில் 28 கற்கள் உபதானம் செய்யப்படுகின்றன. அவ்விதம் செய்யவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. இவ்விதம் செய்வதால் சத்ருபாதை இருக்காது என்றும் தெரிவிக்கிறது. பிறகு ஸ்ருஷ்டி ஏற்பட்டுள்ள க்ரமத்தை கூறும் மந்திரங்களாலும் விடியற்காலைக்கு (உஷக்காலம்) அதிபதியான கால தேவதையின் மந்திரங்களாலும் கற்கள் வைக்கப்படுகின்றன. இதனால் இருள் நீன்குவது போல் பாபமும் நீங்குகின்றது; மீதமுள்ள கற்களின் உபதானத்துடன் அடுக்கு முடிவுறுகிறது. மாலை நிழ்ச்சிகளுடன் அன்றைய காரியாக்ரமம் நிறைவு பெறுகிறது.
ஆறாவது நாள்
ஆறாவது நாள்
காலை நிகழச்சிகளுக்குப் பிறகு 5-வது அடுக்கு அடுக்கப் படுகிறது. இந்த 5-வது அடுக்கு உபதானம் செய்வது மிகவும் கடினம். இதில் வரும் மந்திரங்களின் பெருமை மிக மிக அதிகம். இவற்றால் சத்ருபாதை நீங்குகிறது. பசுக்களின் அபிவிருத்தி ஏற்படுகிறது. பிரஜைகளின் சம்ருத்தி அபிவ்ருத்தியும் ஏற்படுகிறது. இந்த அடுக்கில் 5 கற்களின் உயரம் பாதியாக இருக்கும். அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைக்க வேண்டும். இரண்டு கற்களுக்கும் மந்திரம் உண்டு. அதாவது 10 மந்திரங்கள். பிறகு மூன்றாவது முறையாக ஸ்வயமாக த்வாரம் உடைய சுக்கான் கல்லும் (முதல் அடுக்கில் வைத்ததுபோல்) தங்கத் துண்டும் வைக்கப்படுகிறது. மற்றும் சில கற்கள் வைப்பதுடன் அன்றைய அடுக்கும் வேலை முடிவு பெறுகிறது. 5-வது அடுக்கில் ஒரு பாதி தான் உபதனம் செய்யப்பட்டுள்ளது. மீதி மறுநாள் செய்யப்படும். மாலை நிகழச்சியுடன் அன்றைய கார்யக்ரமம் நிறைவு பெறுகிறது. அன்றிரவு 3 சமித்துக்கள் நெய்யில் ஊர வைக்க வேண்டும். மறுநாள் இவற்றிற்கு ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது.
-- Continued in the next post - 7
No comments:
Post a Comment