இரண்டாவது நாள்
காலையில் எழுத்தவுடன் ஸோமயாகத்தின் சில அம்சம்களை அனுஷட்டித்த பிறகு இந்த உக்யாக்னியை உபஸ்தானம் செய்ய வேண்டும். அதன் பிறகு முன்பு ஆஹவநீயம் இருந்த இடத்தில் 21 பெரிய கற்களைக் கொண்டு கார்ஹபத்ய சிதி (गार्हपत्यचिति:) ஏற்படுத்த வேண்டும். இதுவும் 5 அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு அடுக்கிலும் 21 கற்கள் உண்டு. இதில் ஒரு விசேஷம். இரண்டாவது முறை சயனம் செய்தால் மூன்று அடுக்குகள் தான் வரும். மூன்றாவது முறை செய்தால் ஒரு அடுக்கு தான். இந்த கார்ஹத்யசிதி சதுரவடிவில் இருக்கும். வட்டமாகவும் இருக்கலாம். அதற்கு அளவு சொல்லப்பட்டுள்ளது. பிறகு உக்யாக்னியை இந்த கார்ஹபதய சிதியில் வைத்து விட வேண்டும். காலியான உகையை தயிர், தேன், நெய் மணல் இவற்றால் நிறப்ப வேண்டும். காலியான உகையைப் பார்க்கலாகாது. பிறகு உகையை வைத்திருந்த உரியை எடுத்துக் கொண்டு தென் மேற்கு திசையை நோக்கி செல்ல வேண்டும். அதில் இந்த உரியை வைத்து அதில் 3 இஷ்கைகளை (கற்களை) வைக்க வேண்டும். இவை நிருருதி இஷ்டகைகள் எனப்படும். கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். (மற்ற செங்கல் கற்கள் சிவப்பு நிறம் என்பது குறிப்பிட தக்கது). இவற்ற்றை வைத்து நிருருதி தேவதையை பிரார்த்திக்க வேண்டும். இதனால் பாபம் விலகுவதாக சாஸ்த்ரம் கூறுகிறது. இவற்றை இந்த சமயத்தில் தான் தர்சனம் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் தரித்ரம் விலகும். பிறகு தர்சனம் செய்யலாகாது என்பதை மறக்கக் கூடாது. உக்யாக்னியை வைத்திருந்த நாற்காலியை கற்களுக்கு தெற்கில் வைத்து விடவேண்டும்.
பிறகு யாகம் செய்யும் இடத்திற்கு வந்து ப்ராயணீயேஷ்டி (प्रायणीया-इष्टि:) என்ற யாகம் செய்ய வேண்டும். பிறகு மஹாவேதி நிர்மாணம், (महावेदि निर्माणम्), ஸோமக்ரயம் (सोमक्रयः), ஆதித்யேஷ்டி (आतिथ्या-इष्टि:), அக்னிமானம் (अग्निमानम्), முதலியவை முறையே செய்ய வேண்டும்.

இங்கு அக்னிமானம் செய்யும்போது முன்னுரையில் குறிப்பிட்டுள்ள அளவுப்படி கருடாகாரத்தில் இட அமைப்பை செய்து மந்த்ரங்களால் 6, 12, 24 எருதுகுள் கட்டி கலப்பையால் உழுது கிராமத்தில் விளையும் 7 தான்யங்களையும் காட்டில் விளையும் 7 தான்யங்களையும் விதைக்க வேண்டும். உழும்போது உபயோகிக்கப் பட்ட எருதுகளை அத்வர்யு-(अध्वर्युः)-விற்கு தக்ஷிணையாக அப்போதே கொடுத்து விடவேண்டும். ப்ராம்மணன் உழவு தொழில் செய்யலாகாது. ஆனால் இங்கு சாஸ்த்ரம் அதை விதிக்கிறது. அதற்காக தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உழுவதற்கு முன் சில ஹோமங்கள் சொல்லப்பட்டுள்ளது. என்னே நமது முன்னோர்களின் தீர்க்க தரிசனம்! வேதத்தின் கருணையே கருணை! வேத மாதாவிற்கு ஈடு உண்டா?
பிறகு “ப்ரவர்க்யம்” (प्रवर्ग्य:), “உபஸத்து” (उपसद्), “ஸுப்ரஹ்மண்ய-ஆஹ்வானம்” (सुब्रह्मण्याह्वानम्) -- இவற்றை முறையே செய்ய வேண்டும். “ப்ரவர்க்யம்” என்பது யாகத்திற்கு தலையின் சம்பாதனையாகும். “உபஸத்து” என்பது த்ரிபுர தாகத்தின் அமைப்பாகும். இதனால் நாட்டில் பசி தாகம் நீங்க வழி ஏற்படுவதாக சாஸ்த்ரம் கூறுகிறது. “ஸுப்ரஹ்மண்யாஹ்வானம்” என்பது இந்த்ரனை வரும்படியாக அழைப்பதாகும். இந்த மூன்றும் இரண்டாவது நாளிலிருந்து கடைசி நாளின் முன் தினம் வரை வரும். காலை மாலை இரண்டு வேளைகளிலும் வரும். இந்த மூன்றையும் சாதாரண ஸோமயாகத்தில் 3 நாட்களும் சயனத்தில் 6 நாட்களும் வேறு சில யாகங்களில் 12 நாட்களும் அனுஷ்டிக்க வேண்டும்.

பிறகு இஷ்டகைகளை மந்த்ரத்துடன் கருடாகாரத்தில் வடிவு அமைத்துள்ள இடத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இவ்விடத்தில் க்ற்ளின் அமைப்பைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியம். கற்களின் அமைப்பு (1) சிறிய முக்கோணம் (2) பெரிய முக்கோணம் (3) நீண்ட சதுரத்தின் மீது முக்கோணம் (4) இணைகரம் (5) இணைகரத்தின் மீது முக்கோணம் (6) இரண்டு இனைகரம் சேர்ந்தது. இந்த கற்களின் பெயர் முறையே, (1) पादेष्टकाः (2) अर्धेष्टकाः (3) षोडशीः (4) पक्षेष्टकाः (5) पक्षाग्र्यं (6) पक्षमध्यम्. இதை அடுக்குவதிலும் வேறுபாடு உள்ளது. முதல் அடுக்கில் மேலே க்ருப்ப்ட்டுள்ள கற்களில் (1), (3), (4), (5), (6) கற்கள் தான் வரும். (2) வராது. இரண்டாவது அடுக்கில் (2), (3), (4) தான் வரும். (1), (5), (6) வராது. இப்படி மாறி மாறி அதாவது ஒற்றைப்படை வரிசைகள் முதல் வரிசை மாதிரியும் இரட்டைப்படை வரிசைகள் இரண்டாவது வரிசை மாதிரியும் அடுக்கி வர வேண்டும். இதுதான் கற்களின் அமைப்பும் அவற்றை அமைப்பதின் முறையுமாகும். இனி யாகத்தின் வரிசையை கவனிப்போம்.
-- Continued in the next post - 4
No comments:
Post a Comment