முதல் நாள் விவரணம்
எல்லா ஸோமயாகங்ளைப் போல் இதற்கும் “ஸங்கல்பம்” (सङ्कल्पः) உண்டு. இதற்கு ரித்விக்குகளை வரித்து மதுபர்க்கம் (मधुपर्कः) டுக்க வேண்டும். ரித்விக்குகளுக்கு பூஜை செய்வதுதான் மதுபர்க்கமாகும். பிறகு வேறு சில சடங்க்குகளைச் செய்து, மண் கொண்டு வரப் படுகிறது. அதாவது “உகை” (उखा) அக்னியை வைத்துக் கொள்வதற்கான மண்பாத்திரம் தயார் செய்யப்படுகிறது. குதிரை, கழுதை இரண்டையும் அழைத்துச்சென்று, குதிரையால் ஒரு இடத்தை தாண்டும்படி செய்து, அங்கிருந்து மண் எடுத்து கழுதையின் மீது வைத்துக் கொண்டு வந்து, நீர் கலந்து, உகை செய்யப்பட்டு, நெருப்பினால் சுட்டு, கெட்டியான உகை தயார் செய்யப்படுகிறது. இவை யாவற்றிற்கும் ஏறக் குறைய ஒரு ப்ரச்னம் மந்திரங்கள் வருகின்றன. பிரத்யக்ஷமாக மண் கொண்டு வந்து செய்வது சாத்தியமில்லை. இது போன்ற விஷயங்களில் முன்னதாகாவே செய்து கொண்டு மந்திரங்களைச் சொல்லி தயார் செய்து கொண்டால் போதும் என்று “லோகாக்ஷி-ஸ்ம்ருதி” (लोगाक्षिस्मृति:) கூறுகிறது, அதை அனுசரித்து இப்போது செய்து வருகிறோம். இந்த நீதி – அதாவது முன்பே சித்தம் செய்தவற்றில் மந்திரங்களைக் கொண்டு யாக யோக்யமாக செய்யப்படும் நீதி – தர்பம், சமித்து, சாகை, யூபம், மாவு முதலிய யாக பதார்த்தங்களுக்கும் பொருந்தும்.
அதன் பிறகு வெள்ளையான ஹவிஸ்ஸைக்கொண்டு “வாயவ்ய-वायव्य-யாகம்” செய்யப்படுகிறது. இது ஒரு அபூர்வமான யாகம். இதை தர்சனம் செய்தால் செல்வ வளம், புத்ர பாக்கியம், ஆரோக்கியம் முதலியவை சித்திக்கும். அதன் பிறகு 3 ஹவிஸ்ஸுக்களைக்கொண்டு “தீக்ஷணீயா”-दीक्षणीया-யாகம்” செய்ய வேண்டும். பிறகு ஸோமயாகம் போன்று வபனம், ஸ்நானம், வெண்ணை பூசிக்கொள்ளுதல், கண்ணுக்கு மை இட்டுக்கொள்ளுதல், முண்டாசு (தலைப்பாகை) கட்டிக்கொள்ளுதல் முதலிய தீக்ஷை சடங்குகள் முறையே நடக்க வேண்டும். இவை யாவும் யாகம் செய்பவருக்கு “மூன்றாவது” பிறப்பு கிடைக்க செய்யப்படும் சடங்குகளேயாகும். அதாவது எல்லோரையும் போல்தான் பிராம்மணனும் பிறக்கிறான். இது முதல் பிறப்பு. இரண்டாவது பிறப்பு உபநயனத்தின் மூலம் கிடைக்கிறது. அதனால் இவன் “த்விஜன்” (द्विज:) ஆகிறான். யாகம் செய்தவர் மூன்று பிறப்பு உடையவராக ஆகிறார் "तृतीयं यज्ञदीक्षायाम्" என்று சாஸ்திரம் கூறுகிறது. யாகம் செய்தவர் மற்றவர்களைவிட ஒரு பிறப்பு கூட பெற்றவர் ஆகிறார். அவர் “த்ரிஜன்மா” (त्रिजन्मा) ஆகிறார்.
அதன் பிறகு அன்று காலையில் சித்தம் செய்த மண் உகையை ஆஹவநீயாக்னியால் நன்றாக காய்ச்ச வேண்டும். அந்த சமயத்தில் அந்த உகைக்குள் மரத்தூள், நெய், முஞ்சி, (ஒருவகை தர்பை) இவற்ற்றை வைக்க வேண்டும். மரத்துள், நெய் இவை இரண்டும் அக்னிக்கு பிடித்தமானவை என்றும் முஞ்சி போடுவதால் அன்ன ச்ம்ருத்தி என்றும் வேதம் கூறுகிறது. இவ்விதம் சூடேற்றிய பிறகு அந்த உகைக்குள்ளேயே அக்னி ஏற்படும். இவ்விதம் அக்னி ஏற்படுவதற்கு குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். உகை உடையாமல் பார்த்துக் கொள்ளவெண்டும். நன்றாக உகையில் அக்னி வெளிப்பட்ட பிறகு ஆஹவநீயத்தை அணைத்து விட வேண்டும். உகையில் உண்டான அக்னியை நன்றாக ஸம்ரக்ஷணம் செய்ய வேண்டும். அது அணைந்து விட்டால் மிகப் பெரிய பிராயச்சித்தம் சொல்லப்பட்டுள்ளது. பிறகு அந்த உக்யாக்னியில் (உகையில் உண்டான அக்னியில்) பல மரத்தின்களின் சமித்துக்களை வைக்க வேண்டும். இந்த மந்திரத்தில் யாகம் சைய்பவரின் -- அதாவது கருட சயனம் செய்பவரின் -- எதிரிகள் (சத்ருக்கள்) நாசமடையவேண்டும் என்று ப்ரார்த்தனை வருகிறது. இந்த இடதிதில் ஆபஸ்தம்பர் ஒரு பெரிய கட்டளை இடுகிறார்: “तस्मादग्निचिदो पापं न कीर्तयेद् ....... नो अग्निविदः” --“மஹாக்னிசயனம் செய்தவரின் பாபத்தை வெளியில் சொல்லாதே.........அப்படியே மஹாக்னிசயனத்தைப் பற்றி தெரிந்து கொண்டவனின் பாபத்தையும் வெளியிடாதே” என்பது இதன் பொருள். எனவே அக்னிசயனத்தைப் பற்றி தெரிந்துகொள்வது பெரிய புண்யம். ஸ்ரீ பாகவானின் சரித்ரத்தை தெரிந்து கொள்வதற்கு சமமாகும்.அதன் பிறகு அந்த அக்னியை 3, 6, 12, 13, 15, 17, 24, 30 தினங்கள், நான்கு மாதம், எட்டு மாதம், ஒரு வருஷம், இவற்றில் ஏதாவது ஒரு கால பிரமாணம் வரையில் இந்த உக்யாக்னியை காலை மாலைகளில் ஸமித்து வைத்து காப்பாற்றி வர வேண்டும். பிறகு இந்த உக்யாக்னியை ஒரு உரியில் (शिक्यः - சிக்யம்) (அதாவது கிராமத்தில் பால், தயிர், நெய் வைப்பதற்காக கயிற்றால் தயார் செய்து ஒரு உரியை தொங்கவிடுவார்கள். அதைப் போல் தர்பையில் தயார் செய்து அதில்) இந்த உகையை அக்னியுடன் வைக்க வேண்டும். அதை யாகம் செய்பவர் கழுத்தில் மாட்டிக் கொண்டு அக்னியை தாரணம் செய்து நான்கு அடி வைத்து கிழக்கே செல்வார். இது த்ரிவிக்ரமாவதாரத்தின் அடிப்படையாகும். இந்த சமயத்தில் தர்சனம் செய்வது சாக்ஷாத்தாக மஹாவிஷ்ணுவை தர்சனம் செய்வதுபோல் ஆகும். பிறகு ஸோமயாகத்தின் சில அம்சங்களை அனுஷ்டிக்க வேண்டும். அதாவது “ஸநீஹாரம்” (सनीहार:) -– யாகத்திற்காக பிக்ஷை –- முதலியன. தீக்ஷையின் அங்கமாக பால் சாப்பிட வேண்டும். அன்று தூக்கம் முழிக்க வேண்டும். இந்த உக்யாக்னியை ஒரு சிறிய நாற்காலியில் வைக்க வேண்டும். இத்துடன் முதல் நாள் கார்ய கிரமம் முடிவு பெறுகிறது.

-- Continued in the next post - 3
No comments:
Post a Comment