ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர்
Śrī. Prativādi Bhayaṅkaram Annangarachariar
நாம் எந்த அர்த்தத்தை அறுதியிட வேணுமானாலும் ஒரு பிரமாணத்தைக் கொண்டே அறுதியிட வேண்டி யிருக்கிறது.
मानाधीना मेयसिद्धिः
மானாதீனா மேயஸித்தி:
என்பது சாஸ்த்ரஜ்ஞர்களின் கோஷ்டியில் பிரசித்தமானதொரு வார்த்தை. மானமென்றது பிரமாணமென்றபடி. மேயமென்றது ப்ரமேயமென்றபடி.
प्रमाणाधीना प्रमेयसिद्धिः
பிரமாணாதீனா ப்ரமேயஸித்தி:
என்றதாகத் தேறிற்று. யதார்த்த ஜ்ஞானமுண்டாவதற்கு ஸாதனமானது எதுவோ அதுதான் ப்ரமாணமெனப்படுகிறது. ப்ரத்யக்ஷம், அனுமானம் என்னுமிவையும் ப்ரமாண மானாலும் அவை துர்பல ப்ரமாணங்களேயாகும்; சாஸ்த்ரமொன்றே பிரபல ப்ரமாணமாகும். இதை செய்; இதை செய்யாதே யென்று விதி நிஷேத ரூபமான கட்டளைகளை வெளியிடுவது எதுவோ; அதுவே சாஸ்த்ரமெனப்படும்.
वेदाच्छास्त्रं परं नास्ति
வேதாத் சாஸ்த்ரம் பரம் நாஸ்தி
என்று வ்யாஸ மஹர்ஷி சபதம் பண்ணிக் கூறியிருக்கையாலே "வேதத்திற்கு மேற்பட்ட சாஸ்திர மில்லை" என்பது வைதிகர்களின் கொள்கை. நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் இக்கொள்கையையே வெளியிட்டுள்ளார்கள். "உளன் சுடர் மிகு சுருதியுள்" என்றார் நம்மாழ்வார்;
आदौ वेदाः प्रमाणम्
ஆதௌ வேதா: ப்ரமாணம்
என்றார் பட்டர். வைதிகர்களான நாம் ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளையும் ப்ரமாணமாகக் கொள்பவர்களேயானாலும் அவை ஸ்வத: பிரமாணமல்ல; பரத: பிரமாணம் எனப்படும். வேதம் ஸ்வத: ப்ரமாணம் என்று ஒப்பு கொள்ளப் பட்டிருக்கிறது.
வேதமென்கிற சொல்லுக்கு பொருள் என்னவென்றால்,
वेदयतीति वेदः
வேதயதீதி வேத:
தெரிவிப்பது வேதம். எதை தெரிவிப்பது என்றால், பிரத்யக்ஷத்தாலும் அனுமானத்தினாலும் தெரிந்து கொள்ளமுடியாத விஷயங்களை எல்லாம் தெரிவிப்பது என்றபடி.
विदन्ति अनेनेति वेदः
என்றாலுமுண்டு. இதற்கு "கரணே வ்யுத்பத்தி" [करणे व्युत्पत्ति] என்று பெயர்.
प्रत्यक्षेणानुमित्या वा यस्तूपायो न बुद्ध्यते
यत्तं विदन्ति वेदेन तस्माद्वेदस्य वेदता
என்றார்கள் மஹர்ஷிகளும். இந்த வசனத்தின் பொருளையே கீழே நாம் வெளியிட்டது. ஆக ஸகலார்த்தங்களையும் வெளியிடுவதாய் அத எவ வேத மென்று பேர் பெற்றதான பிரமாண ரத்னத்திற்குப் பல பெருமைகளுள்ளன.
அவையாவன -- அபௌருஷேயத்வம், நித்யத்வம், நிர்தோஷத்வம், அனந்தத்வம் என்னுமிவை. இவற்றை அடைவே விவரிக்கிறோம்.
அபௌருஷேயத்வமாவது ஒருவராலும் செய்யப்படாததா யிருக்கை. ஒரு புருஷனால் இயற்றப்பட்டது பௌருஷேய மெனப்படும்; அங்ஙநல்லாதது அபௌருஷேயம். வேதம் ஒரு வராலும் இயற்றப்படாததாகையாலே அபௌருஷேய மெனப்படுகிறது.
புருஷனால் இயற்றப் படாதது என்று கேட்டவுடனே சிலர் "வேதம் ஸ்த்ரீயால் இயற்றப் பட்டது போலும்" என்று பேசத் தலைப் படுகிறார்கள். இங்கு புருஷ சப்தமானது ஸ்த்ரீபுமானாகிய சேதன ஸாமான்யத்தை சொல்லுவதாகையாலே ஒரு நபராலும் இயற்றப்பட்டதன்று என்னும் பொருளிலேயே அபௌருஷேய மென்கிற சொல் தோன்றி யுள்ளது.
இனி அபௌருஷேயமாயிருக்க எப்படி முடியும்? என்கிற ஆக்ஷேபத்தை சிறிது விவரிப்போம். அநேக சப்தங்களின் ராசியே யன்றோ வேதமெனப் படுகிறது; கண்டம், தாலு, பல், உதடு, முதலிய முகத்திலுள்ள உறுப்புகளினின்று வெளியாகும் ஒலியே யல்லவா சப்தம்; ஒவ்வொரு சப்தமும் புருஷனால் செய்யப்பட்டுத் தானே வெளியாகின்றது. புருஷன் வெறுமனே யிருந்தாநாகில் சப்தம் வெளி வரவே முடியாதன்றோ. ஆகவே வேதமாகிற சப்தராசிகளும் புருஷனால் உண்டாக்கப் பட்டு பௌருஷேயமாகத்தானே யிருக்க வேண்டும்; அபௌருஷேய மென்று எங்ங்னே சொல்லலாம்? என்பது சிலருடைய ஆக்ஷேபம்; அல்லது ஆசங்கை.
இதற்கு ஸமாதானம் கூறுவோம்.

Source:
அறுபத்துமூன்று உபன்யாஸமாலை - (24), 1954, pp. 57-58.
-- From
my Collections.
No comments:
Post a Comment