கருடாகாரத்தில் கற்களை அடுக்குமிடத்தில் வேதிக்கு இருபுறத்திலும் இரு குதிரைகளை நிறுத்தி வைக்கவேண்டும். தென் புறம் வெள்ளை குதிரை. வடக்கில் கருப்பு குதிரை. கற்களை அடுக்கும் பொது வெள்ளைக் குதிரையை தொட வேண்டும். முதல் வரிசை முடிந்த பின் அதன்மீது மண் பூச வேண்டும். அப்பொழுது கறுப்புக் குதிரையை தொடவேண்டும். சிதி அடுக்கும்போது வெள்ளை குதிரையை முதலிலும், கறுப்புக் குதிரையை கடைசியிலும் தொட வேண்டுமென்று ஏற்ப்படுகிறது. இது ஒவ்வொரு சிதி அடுக்கும் போதும் உண்டு. இக்காலத்தில் குதிரை பொம்மைகளை வைத்து செய்து வருகிறோம்.
முதலில் கருடாகாரத்தில் அமைந்துள்ள இடத்தை குதிரையால் தாண்டும்படி செய்தல் வேண்டும். குதிரை தாண்டிய இடம் மிக பரிசுத்தமாகும். முதல் அடுக்கு அமைப்பதற்கு முன் மண்ணை தோண்டி அங்கு சிலவற்றை உபதானம் (வைத்தல்) செய்ய வேண்டும். பிறகு (மண்ணைத் தோண்டி) தாமரை இலை வைக்க வேண்டும். இது ஆகாயத்தின் வடிவமாகும். அதன் மேல் தங்கத்தால் செய்த 21 மொட்டுகளை உடைய தகடு தாமரை இலையின் மேல் வைக்க வேண்டும். இது உகை தாரணம் செய்யும்போது யாகம் செய்பவவர் தரித்து நிற்பார். இந்த தங்கத் தகடு ஆதித்ய மண்டலம். (ஸூர்ய மண்டலம்) ஆகும். அதன் பக்கத்தில் தங்கத்தால் செய்த புருஷ வடிவில் உள்ள ஒரு விக்ரஹம் (பிரதிமை) வைக்க வேண்டும். இது நாராயணனின் வடிவமாக சொல்லப்படுகிறது. பிறகு இரண்டு ஸ்ருக்குகள் (மரக் கரண்டிகள்) நெய், தயிர் இவற்றால் நிரப்பி வைக்க வேண்டும். இவை யாவற்றிற்கும் விசேஷ பலன்களை வேதம் கூறுகிறது. பிறகு உற்பத்தியிலேயே த்வாரம் உடைய தீயினால் சுடப்படாத சுக்கான் (சுண்ணாம்பு) கல்லை வைக்க வேண்டும். பிறகு அருகம் புல் வைக்க வேண்டும். இதனால் பசுக்களுக்கு க்ஷேமமாகும். பிறகு கூர்மம், மரத்தால் செய்த உரல், உலக்கை, முறம் இவற்றை வைக்க வேண்டும். பிறகு அக்னியை தரணம் செய்திருந்த மண் பாத்தரத்தை (உகையை) மணலால் நிரப்பி அந்த கருடாகாரத்தில் நடுவில் பள்ளத்தில் வைக்க வேண்டும். அத்ல் வாயவ்ய யாகத்தில் உபயோகித்த ஹவிஸ்ஸின் உத்தமாங்த்தை வைக்க வேண்டும். பக்ஷியின் வடிவில் இந்த சயனம் செய்யப்படுகிறது. பக்ஷி பறக்கும் நிலையில் மூக்கு கீழ் நோக்கி இருக்கும். அந்த வடிவில் நாம் இந்த கற்களை அடுக்குகிறோம். அதனால் பக்ஷியின் முதுகில் ஹோமம் செய்த மாதிரி ஆகிறது. எனவே வாயவ்ய யாகத்தின் உத்தமாங்கத்தை மேல் நோக்கி பார்த்துள்ள முகமுடயதாய் உபதானம் செய்வதால் அதில் ஹோமம் செய்யப் பட்டதாக ஆகிறது.
அதாவது முகத்திலேயே ஹோமம் செய்ததுபோல் ஆகிறது. இவ்விதம் இதைப்பற்றி நமது ப்ராஹ்மணம் கூறுகிறது. புருஷன் மேல் நோக்கி தலையை வைத்து படுத்திருக்கும் கருடாகாரத்துக் குள்ளேயே கற்கள் அடுக்கப் படுகின்றன. இது திருமாலின் திரு உருவமாம். பிறகு யாகம் செய்பவர் மேற்கு நோக்கி நின்று “புருஷஸூக்த”த்தால் “உபஸ்தானம்” (उपस्थानः) செய்ய வேண்டும். இந்த மகாக்நிச்சயனத்தில் இது விஷ்ணுவின் வடிவம். பிறகு பரமசிவன் ஆராதனமும் அம்பாள் ஆராதனவமும் வரப் போகிறது. பிறகு 5 சிறிய தங்க தகடுகளை வைக்க வேண்டும். பல மந்த்ரங்களச் சொல்லி இஷ்டகைகளை (செங்கற்களை) வைக்க வேண்டும். பிறகு 12 சிறிய மண் பாத்ரங்களில் நீர் நிரப்பி தங்கத் துண்டுகளைப் போட்டு ஒவ்வொரு திசையிலும் 2 பாத்திரங்களும், நடுவில் 4 பாத்திரங்களும் வைக்க வேண்டும். இதனால் உலகத்திற்கு க்ஷேமம் ஏற்ப்படுகிறது. பிறகு நீவார தான்யத்தால் செய்த அன்னத்தையும் பூமியில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னத்தின் நிறைவு ஏற்படுகிறது. பிறகு மீதமுள்ள கற்களை உபதானம் செய்து 200 கற்களை பூர்த்தி செய்து மண் பூசிவிட வேண்டும். அதன்பிறகு அந்த அந்த அடுக்கின் மீது 7 ஹோமங்கள் செய்து சிதியை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்விதம் ஒவ்வொரு நாளும் ஒரு சிதி அடுக்க வேண்டும். கடைசி சிதியை மட்டும் இரண்டாக பிரித்து முதல் பாதி 6-வது நாளும் மீதியை 7-வது நாளும் அடுக்க வேண்டும். இதுதான் முறை. இரவு வேளையில் வெள்ளைக் குதிரையை அந்த கருடாகாரத்தை சுற்றி வரச் செய்து அன்றைய நிகழ்ச்சியை முடித்து விட வேண்டும். 2-வது நாளிலிருந்து குதிரை வலம் வரும் நிகழ்ச்சி தினமும் உண்டு. 2-வது நாளிலிருந்து 7-வது நாள் முடிய காலையில் ப்ரவர்க்யம், உபஸத்து, ஸுப்ரஹ்மண்யாஹ்வானம் முடிந்த பிறகு கற்களை அடுக்குதல் (इष्टकोपधानम्) வரும். அது முடிந்து மாலையில் உள்ள ப்ரவர்க்யம், உபஸத்து, ஸுப்ரஹ்மண்யாஹ்வானம் வரும். இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த க்ரமம் 2-வது நாளிலிருந்து 6-வது நாள் முடிய நடைபெறும்.
-- Continued in the next post - 5
No comments:
Post a Comment